மும்பையின் அதிரடி வெற்றி – ஹைதராபாத்தை பந்தாடியது மும்பை அணி ! MI won by 4 wickets ஐபிஎல் 2025 போட்டியில் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற 33வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி, அவர்களின் மூன்றாவது வெற்றியாகும் மற்றும் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேற்றம் செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸ்: மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் நன்றாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். முதல் ஓவரிலேயே இவர்கள் இருவரின் கேட்ச்களையும் தவறவிட்டனர் மும்பை அணியினர். ஆனாலும் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினர். ஒரு வழியாக அபிஷேக் ஷர்மா ஆட்டத்தின் போக்கை மாற்ற ரன்களை குவிக்கத் தொடங்கினார். 28 பந்துகளின் 40 ரன்கள் குவித்தவுடன் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அவுட் ஆகிவிட்டார்.பின்ன...